‘பிரகலாதர் ‘ எனும் உற்சவர் சிலையை உருவாக்கிய விதம் பற்றிய ஆவணம் கூறும் ஒரு பழைய கல்வெட்டு இந்த ஊரின் வரலாற்றினையும் சற்று விரிவாக உரைக்கிறது.

           சந்திரகிரி இராஜ்ஜியத்தின், ஜெயங்கொண்ட சோழமண்டல எல்லைக்குட்பட்ட கூவம் ஆற்றின் அருகில்,தெற்குப் பகுதியில் நரசநாயகர் புரம் எனும் ஒரு பழைய கிராமம் அமைந்துள்ளது.


           அவ்வூரில் உள்ள கோயிலில் ‘கடவுளின் அவதாரம்’ எனப் பெயரிடப்பட்டு ‘புரந்தர நரசிங்க பெருமாள்’ எனும் மூலவர் வீற்றிருந்தார் என மேலும் அக்கல்வெட்டு உரைக்கிறது. அந்த ‘நரசநாயகர் புரம்’ பின் பேச்சு வழக்கில் நரசிங்கபுரம் என பெயர் மாற்றம் ஆனது.

கோயில் பெயர் :- ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம்

மூலவர் :- ஸ்ரீ லட்சுமி நரசிம்மா

உற்சவர் :- ஸ்ரீ பிரகலாத வரதர்

அம்மன்/ தாயார் :- ஸ்ரீ மரகதவல்லி தாயார்

தல விருட்சம் :- வடகலை, பாஞ்சரார்த்தம்

தீர்த்தம் :- ஆகமம்/பூஜை :- பழமை :- 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

திரு விழா :- ஆனி பிரம்மோட்சவம்

தலசிறப்பு :- இரண்யவதத்திற்கு பிறகு தாயார் இடப்பக்கம் அமர்ந்து சாந்தப்படுத்தியது., தாயார் பக்தர் களை நேர் பார்வையிடுதல்., பெருமாளும் தாயாரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி காட்சி தருதல்.

நேர்திக்கடன் :- அனைத்து விதமான வேண்டுதல், செவ்வாய் தோஷம் இவைகளுக்கு பரிகாரத் தலமாகும்

தல வரலாறு :- 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசு ஆட்சியில் கட்டப் பெற்ற கலை ஆகும்.
 
Make a Free Website with Yola.