நரசிங்கபுரம் என்று எல்லோரும் அன்பாக அழைக்கப்படும் இந்த ஊர்ச் சிறப்பு, தண்ணீருக்கு என்றுமே பஞ்சம் ஏற்பட்டதில்லை. மூன்று போகமும் பயிர் செய்யும் வசதி இருக்கிறது. சென்னையில் இருந்து மேற்குத் திசையே சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரின் பரப்பளவு சுமார் 150 ஏக்கர் ஆகும். இது ஒரு தன்னிறைவு அடைந்த ஊராட்சி ஒன்றியமாகும். இங்கு சுமார் 3000 குடும்பங்கள் வசிக்கிறது. அதில் ஓட்டுக்கு தகுதி வாய்ந்த 1233 ஆண்களும்,1155 பெண்களும் இருக்கிறார்கள்.


முக்கியத்தொழில்கள்:-

எழில் நிறைந்த வயல் சூழ்ந்த நரசிங்கபுரம் கிராமத்தில் விவசாயமும், கைத்தறியும் முக்கிய தொழில்களாக உள்ளது. கடை கண்ணிகளும், கைத்தொழில்களும், அலுவலகப் பணிகளும், மற்றும் கட்டுமானத் தொழில்களும் பிற தொழில்களாக உள்ளது. woosu என்ற பெயரில் ஒரு மேலை நாட்டுத் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. மற்றும் பாக்குமரத் தட்டுத் தொழில், பீடி சுருட்டுத் தொழில் போன்ற ஒரு சில குடிசைத் தொழில்களும் நடந்து கொண்டிருக்கிறது.


பள்ளிகள்:-

இங்கு ஒரு ஆரம்பப் பள்ளியும், ஒரு நடுநிலைப் பள்ளியும் இருக்கிறது. இந்த ஊரில் உள்ள சின்னஞ் சிறார்கள் அன்றி மற்றவர்கள் ஆசிரியர்களாகவும், மாணவர்களாகவும் வந்து போகின்றனர். 100% கல்வி அறிவில் தேர்ச்சி பெற்ற இந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்தில் முன் மாதிரியான கிராமமாகத் திகழ்கிறது.


கோயில்கள்:-

பழமையான வேலைப்பாடுகள் நிறைந்த ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், திருமுருகன் திருக்கோயில், ஸ்ரீசெல்வ கணபதி ஆலயம், பஜனை மடமும், மாரியம்மன் திருக்கோயிலும், மற்றும் ஆரியமர்ந்தாள், எல்லம்மாள் ஆகிய பழமை வாய்ந்த கோயில்களும், ஒரு புதிய வைஷ்ணவத் தலத் திருக்கோயிலும் இந்த ஊரின் சிறப்பை பறைசாற்றுகின்றது.


பேருந்து வசதி:-

இந்த ஊரில் உள்ள ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயிலுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம், பூந்தமல்லி பணிமனையிலிருந்து 591c பேருந்து தினசரி வந்து போகிறது.


நூலகம்:-

இந்த ஊரில் பழமை வாய்ந்த நூலகம் ஒன்று உள்ளது இதில் சுமார் 5000 புத்தகங்களுக்கு மேல் உள்ளது. பொது, அரசியல், சமயம், இலக்கியம், மற்றும் கணணியைப் பற்றிய புத்தகங்கள் எல்லாம் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஏராளமாக உள்ளன.


அஞ்சல் வசதி:-

இங்கு ஒரு அஞ்சல் அலுவலகம் ஒன்று உள்ளது. சுமார் 500 அஞ்சலக சிறு சேமிப்பு அட்டைகள் மற்றும் ஆயுள் காப்பீடுகளும் கொண்டுள்ளது. அஞ்சல் தலைகள் விற்பனை, பதிவுத் தபால், விரைவுத் தபால், புத்தகத் தபால் என இதன் சேவை தொடர்ந்து கொண்டே போகிறது.


கால்நடை மருத்துவமனை:-

கால் நடை மருத்துவமனையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. கிராமம் என்று ஒன்று இருந்தால் அங்கு கால் நடைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த கால்நடைகளுக்கு வரும் நோய்களை தீர்ப்பதற்கு மருத்துவமனை ஒன்று நல்ல முறையில் சேவை செய்து கொண்டிருக்கிறது.


பிற அரசு அலுவலகங்கள்:-

மற்றும் அங்கன்வாடி, அரசு குழந்தைகள் காப்பகம், ஊராட்சி அலுவலகம், கூட்டுறவுப் பண்டகசாலை, மற்ற அரசு பணிகள் இங்கு செயலாற்றி வருகிறது.


கூவம் ஏரி:-

எங்கள் ஊரின் சிறப்புக்கு கூவம் ஏரியும் ஒரு காரணம். ஏனெனில், மதகுகள், களிங்கள் அனைத்தும் எங்கள் ஊர் எல்லையை துவக்கமாகக் கொண்டுள்ளது. எங்கள் ஊர் எல்லையில் இருந்து புறப்படும் நீர், ஏரி நீர்ப்பாசனமாக பல ஊர்களுக்கு விவசாயம் செய்யப் பயன்படுகிறது.

 

Make a free website with Yola